வந்துருச்சு மறுபடியும்... கொரோனா நெறிமுறை அவசியம்-மாநில அரசுக்கு மத்திய அரசு கடிதம்

COVID-19 Tamil nadu
By Thahir Jun 04, 2022 06:01 AM GMT
Report

5 மாநில அரசுகளுக்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்துமாறு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் அனுப்பியுள்ளார்.

நாட்டில் கொரோனா பரவல் குறைந்திருந்த நிலையில், கடந்த சில நாட்களாக டெல்லி, உத்ரபிரேதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

வந்துருச்சு மறுபடியும்... கொரோனா நெறிமுறை அவசியம்-மாநில அரசுக்கு மத்திய அரசு கடிதம் | Corona Increase State Government Action Notice

இந்த சமயத்தில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் அனுப்பியிருந்தது. அதில், தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா, உள்ளிட்ட 5 மாநில அரசுகளுக்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்துமாறு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கேட்டுக்கொண்டார்.

தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் இதுவரை பெற்ற வெற்றிகளை இழக்காமல், நெறிமுறைகளை பின்பற்ற வேண்டிய அவசியம் உள்ளது என கூறினார்.

இதனால் மாநில அரசுகள் கொரோனா பரவல் அதிகமுள்ள பகுதிகளில் சில கட்டுப்பாடுகளை விதித்து, முகக்கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட நெறிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தி வருகின்றனர்.