கொரோனா அதிகரிப்பு.! தமிழகத்தில் ஏப்ரல் 1 முதல் பள்ளிகள் மூடப்படுகிறதா?
இந்தியாவில் கடந்த நான்கு மாதங்களாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கொரோனா முடக்கத்திலிருந்து படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. தற்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மெல்ல வழக்கம் போல இயங்க ஆரம்பித்துவிட்டன.
தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் 826 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. தஞ்சாவூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஒரே பள்ளியில் 56 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு பதிவாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து செய்யப்பட்ட பரிசோதனையில் மாணவிகளின் பெற்றோர்களுக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் ஏப்ரல் 1-ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் மூடப்படலாம் என செய்திகள் பரவத் தொடங்கின.
இதற்கு பள்ளிக்கல்வித் துறை தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதில் பள்ளிகள் மூடப்படுவது தொடர்பாக தற்போது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.