மீண்டும் கொரோனா : இந்த 6 மாநிலங்களில் ரொம்ப அதிகம் - வார்னிங் கொடுக்கும் மத்திய அரசு

COVID-19
By Irumporai Mar 17, 2023 03:05 AM GMT
Report

கொரோனா தொற்று பரவல் சில மாநிலங்களில் சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளதால், அதனை கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய உத்தரவிட்டுள்ளது.

  தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா

உலகை அச்சுறுத்திய கொரோனா தொற்றை தடுப்பூசி, சமூக இடைவெளி என பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு அதனை தற்போது பெருமளவு கட்டுப்படுத்தியுள்ள நிலையில் தற்போது அதன் தாக்கம் இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது .

மீண்டும் கொரோனா : இந்த 6 மாநிலங்களில் ரொம்ப அதிகம் - வார்னிங் கொடுக்கும் மத்திய அரசு | Corona Increase 6 States Including Tamil Nadu

ஆறு மாநிலங்களில் அதிகரிப்பு  

இந்த கொரோனா தொற்றானது தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ள காரணத்தால் மத்திய சுகாதாரத்துறை குறிப்பிட்ட மாநிலங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.

அதாவது, கொரோனா தடுப்பூசிகள், அதன் வழித்தோன்றலை கண்டறிவது, முறையான பரிசோதனை என கொரோனா காலத்தில் தீவிரமாக செயல்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்த அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.