மற்றொருமுக்கிய திமுக வேட்பாளருக்கு கொரோனா: சோகத்தில் கட்சியினர்

corona dmk candidate Karunanidhi
By Jon Apr 11, 2021 01:08 PM GMT
Report

சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தி.நகர் தொகுதி திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதிக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நெருங்கிய நண்பரான பழக்கடை ஜெயராமனின் இளையமகன் ஜெ.கருணாநிதி. இவரது அண்ணனும் மறைந்த எம்எல்ஏவுமான ஜெ. அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

மற்றொருமுக்கிய திமுக வேட்பாளருக்கு கொரோனா: சோகத்தில் கட்சியினர் | Corona Important Dmk Candidate Parties Tragedy

இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தியாகராய நகர் தொகுதியில் போட்டியிட்ட ஜெ. கருணாநிதி தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது திமுகவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.