தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது!
தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு 11 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் இன்று சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 10,448 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது
Tamil Nadu reports 10,448 new #COVID19 cases, 21,058 recoveries, and 270 deaths today; active cases at 1,14,335 pic.twitter.com/XEY9MYqBqy
— ANI (@ANI) June 16, 2021
இதுவரை 22 லட்சத்து 44 ஆயிரத்து 073 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில், 270 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் அதிகபடசமாக ஈரோட்டில் 1123 பேருக்கும் செங்கல்பட்டில் 456 பேருக்கும் திருப்பூரில் 608 பேருக்கும் சேலத்தில் 693 பேருக்கும் கோவையில் 1420 பேருக்கும் புதிதாகத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.