தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2,500க்கும் கீழ் குறைந்தது!

corona tamilnadu
By Irumporai Jul 14, 2021 04:26 PM GMT
Report

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது.

தமிழ்நாட்டில் இன்று 2 ஆயிரத்து 458 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

இந்த நிலையில் கொரோனாவால் மேலும் 55 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,557 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 3,021 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 24,62,244 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.