தமிழகத்தில் இன்று 4000 கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் இன்று மேலும் 3,867 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,867 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக கோவையில் 445 பேருக்கும், ஈரோட்டில் 349 பேருக்கும், சேலத்தில் 245 பேருக்கும், திருப்பூரில் 225 பேருக்கும், தஞ்சாவூரில் 227 பேருக்கும், சென்னையில் 222 பேருக்கும், நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,96,287ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் 4,382 போ விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதையடுத்து இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 24,27,988-ஆக உயர்ந்துள்ளது.
இன்று 72 போ பலியாகியதை அடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,005-ஆக உயர்ந்துள்ளது.