கணவருக்கு கொரோனா! தனிமைப்படுத்திக் கொண்ட பிரியங்கா காந்தி

covid19 priyanka rahul gandhi
By Jon Apr 02, 2021 07:23 PM GMT
Report

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் பிரசாரத்தை திடீரென ரத்து செய்துள்ளார் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல், வருகிற 6ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இது ஒருபுறமிருக்க, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 10 வேட்பாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் தன்னுடைய கணவரான ராபர்ட் வதோராவுக்கு தொற்று உறுதியானதால், வீட்டிலேயே தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக பிரியங்கா காந்தி டுவிட் செய்துள்ளார்.

எனவே தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் ஏற்கனவே திட்டமிட்டிருந்த தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்வதாகவும் அறிவித்துள்ளார். பிரியங்கா காந்தி நாளை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது தந்தை ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு சென்று மரியாதை செய்து விட்டு, கன்னியாகுமரியில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்வதாக திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.