சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு... கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை குறைப்பு...

Chennai corporation Corona hotspot
By Petchi Avudaiappan May 31, 2021 10:59 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

சென்னையில் கொரோனா பாதிப்புள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாகசென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.   

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. சென்னையிலும் நாள் ஒன்றுக்கு 2600 என்ற அளவிலேயே பாதிப்புகள் பதிவாகிறது. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்த நேரத்தில் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை மாநகராட்சி அதிகாரிகள் கண்டறிந்து கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவித்து வந்தனர்.

சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு... கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை குறைப்பு... | Corona Hotspot Areas Decreased

அந்த வகையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை சென்னையில் அதிகபட்சமாக 2600 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக இருந்தது.ஆனால் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் குறைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், சென்னை மாநகராட்சியில் 10 நபர்களுக்கு மேல் கொரோனா தொற்றுள்ள உள்ள 499 இடங்களும், 6 நபர்களுக்கு மேல் தொற்றுள்ள 1331 இடங்களும் சேர்த்து மொத்தம் 1800 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளாக உள்ளன.

அதுமட்டுமின்றி, 3 நபர்களுக்கு குறைவாக தொற்றுள்ள 5037 இடங்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.