கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டும்: அதிர்ச்சி தகவல் கொடுத்த சுகாதாரத்துறை செயலாளர்

covid vaccine india people tamilnadu
By Jon Mar 26, 2021 12:56 PM GMT
Report

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டும் என தெரிவித்தார்.

அதே சமயம் ,தமிழ்நாட்டில் கொரோனா அதிகமாக காரணம் மக்கள் முகக்கவசம் அணியததாலேயே கொரோனா மீண்டும் பரவி வருகிறது. முகக்கவசம் அணியும் பழக்கத்தை மக்கள் கைவிடக் கூடாது என கூறினார்.

தற்போது, 25 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்தியுள்ளதாகவும் இன்னும் 10 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் ஏப்ரல் முதல் வாரத்தில் பயன்படுத்தப்படவுள்ளதாக கூறினார்.