தமிழகத்தை மிரட்டும் கொரோனா , ஹாட்ஸ்பாட்டாக மாறும் ஐ.ஐ.டி ? : மேலும் 25 பேருக்கு தொற்று உறுதி

COVID-19 Chennai
By Irumporai Apr 23, 2022 05:34 AM GMT
Report

சென்னை ஐஐடியில் இதுவரை 55 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மற்ற மாநிலங்களில் அதிகரித்து வந்த கொரோனா தொற்று , தற்போது மீண்டும் தமிழகத்திலும் அதிகரித்துள்ளது, ஆகவே முகக்கவசம் அணியாவிட்டால் ரூ 500 அபராதம் செலுத்தபடும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ,சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை  மிரட்டும் கொரோனா , ஹாட்ஸ்பாட்டாக மாறும் ஐ.ஐ.டி ?  : மேலும் 25 பேருக்கு தொற்று உறுதி | Corona For 25 More In Chennai No Xe Type Corona

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐஐடியில் 1,420 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் மொத்தம் இதுவரை 55 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதித்தவர்கள் ஐ.ஐ.டி வளாகத்தில் தனிமைபடுத்தப்பட்டு இருக்கின்றனர். கொரோனா கண்டறியப்பட்ட அனைவருக்கும் குறைவான அளவு பாதிப்பு தான். சிறிய அளவில் தொண்டை எரிச்சில் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

எந்தவகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது 2 வாரங்களுக்கு பிறகே தெரியவரும். தமிழகத்தில் இதுவரை XE வகை கொரோனா கண்டறியப்படவில்லை. இப்போதுவரை தொற்று பாதிப்பு விகிதம் குறைவாகதான் உள்ளது.

கொரோனா குறித்து மக்கள் பதற்றம் அடையும் சூழல் தமிழ்நாட்டில் இல்லை என்றும் கொரோனா கட்டுக்குள் தான் உள்ளது எனவும் தெரிவித்தார். எனவே, சென்னை ஐஐடியில் ஏற்கனவே 30 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 55-ஆக அதிகரித்துள்ளது