தமிழகத்தில் புதிதாக 12,772 பேருக்கு கொரோனா!

corona tamilnadu
By Irumporai Jun 14, 2021 03:15 PM GMT
Report

தமிழகத்தில் புதிதாக 12,772 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 12,772 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 23,66,493 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 25,561 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 21,99,808 பேர் குணமடைந்துள்ளனர்.

254 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதில் அரசு மருத்துவமனைகளில் 146 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 108 பேரும் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 29,801 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி 1,36,884 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 1,728 பேரும், ஈரோட்டில் 1,295 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 828 பேர் பாதிக்கபட்டுள்ளனர்.