கொரோனா கட்டுப்பாடு நீடிக்கப்பட்டால் ரூ.10000 இழப்பீடு வழங்கவேண்டும் - ஜி.ஆர்.குமார் பேட்டி

corona money issue flower vendor
By Praveen Apr 15, 2021 12:46 PM GMT
Report

 கொரோனா கட்டுப்பாடு நீடிக்கப்பட்டால் தொழிலை சார்ந்த குடும்பங்களுக்கு 10,000 ரூபாய் இழப்பீடு தரவேண்டும் என தமிழ்நாடு பூங்கொத்து மற்றும் மலர் அலங்கரிப்பவர்கள் சங்கம், பூங்கொத்து மற்றும் மலர் அலங்கரிப்பவர்கள் நல அறக்கட்டளை யின் மாநில தலைவர் ஜி.ஆர். குமார் தெரிவித்துள்ளார்.  

தமிழ்நாடு தமிழ்நாடு பூங்கொத்து மற்றும் மலர் அலங்கரிப்பவர்கள் சங்கம், பூங்கொத்து மற்றும் மலர் அலங்கரிப்பவர்கள் நல அறக்கட்டளை நிர்வாகிகள் சென்னை பாடியில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மாநில தலைவர் ஜி.ஆர் குமார்,

கொரோனாவின் 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இதன்படி திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது. முதல் அலையின் போதே திருமண மண்டபங்கள் மூடப்பட்டு பல திருமணங்கள் நிறுத்தப்பட்டதில் பெரும் பாதிப்பை சந்தித்தோம்.

இதன்மூலம் பிழைப்பு நடத்தி வந்த பூங்கொத்து மலர் அலங்கரிப்பவர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் சார்ந்தவர்கள் மிகுந்த நஷ்டம் அடைந்தோம். இந்த நிலையில் தற்போது அரசு அறிவித்துள்ள படி 100 பேரை மட்டுமே வைத்து எங்களால் திருமண நிகழ்ச்சிகள் நடத்த முடியாது.

இதனால் திருமண மண்டபங்களில் நடைபெறும் நிகழச்சிகளில் 50 சதவீதம் பேர் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும். இதுகுறித்து முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர்களுக்கு எங்களது கோரிக்கை அடங்கிய மனவை கொடுக்க உள்ளோம் .

கட்டுப்பாடு தளர்த்தப்பட்டால் திருமண மண்டப தொழில், சமையல், புகைப்படம் மற்றும் நாதஸ்வர தொழில் உள்ளிட்ட தெழில்களில் நேரடியாக மற்றும் மறைமுகமாக உள்ள 65 லட்சத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் இதன் மூலம் பயன்பெறும். இந்த கட்டுப்பாடு நீட்டிக்கப்பட்டால் தொழிலை நம்பியிருக்கும் குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாயை இழப்பீடு தரவேண்டும் என கூறினார்.