மிரட்டும் கொரோனா .. வலிமை ரிலிஸ் ஒத்திவைப்பு : சோகத்தில் ரசிகர்கள்

COVID19 AjithKumar Valimai Pongal BoneyKapoor
By Irumporai Jan 06, 2022 02:01 PM GMT
Report

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் அதிகராப்பூர்வமாக 3வது அலை உருவாகிவிட்டதாக அறிவித்து கடுமையான கட்டுப்பாடுகளையும் அறிவித்துவிட்டன.

இதேபோல், கர்நாடகா, தெலங்கானா, ஆந்திர மற்றும் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன

குறிப்பாக, தியேட்டர்களில் 50 விழுக்காடுக்கும் மேல் பார்வையாளர்களை அனுமதிக்ககூடாது என தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் அளிவித்துள்ளன.

இதனால், பொங்கல் விருந்தாக திரைக்கு வர இருந்த மிகப்பெரிய பட்ஜெட் படங்கள் அனைத்தும் வசூலை கருத்தில் கொண்டு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ராஜமௌலியின் இயக்கத்தில் சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் திடீரென கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கபட்டதால், பட வெளியீட்டை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்தன

இந்த நிலையில் வலிமை திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகும் என தயாரிப்பாளர் போனிக்கபூர் டிவிட்டரில் அறிவித்திருந்தார். இதனால், ரசிகர்களும் பொங்கலை வலிமை பொங்கலாக கொண்டாட காத்திருந்தனர்

மிரட்டும் கொரோனா ..  வலிமை ரிலிஸ் ஒத்திவைப்பு  :  சோகத்தில் ரசிகர்கள் | Corona Effect Ajith Kumar Valimai Postponed

இந்நிலையில், படத்தின் வெளியீடு ஒத்திவைப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ள படக்குழு, வலிமை படம் சரியான நேரத்தில் ரிலீஸாகும் என்றும், அதுவரை மக்கள் கொரோனா வழிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.