8 ஈஷா வித்யா பள்ளிகளை கொரோனா சிகிச்சைக்காக அரசுக்கு அளிக்கிறோம் - சத்குரு

corona treatment school eesha sathguru
By Praveen Apr 27, 2021 10:39 AM GMT
Report

தமிழகத்தில் உள்ள ஈஷா வித்யா பள்ளிகளை கொரோனா சிகிச்சைக்காக அரசுக்கு அளிப்பதாக சத்குரு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 8 ஈஷா வித்யா பள்ளிகளை கொரோனா சிகிச்சை மையங்களாக தமிழக அரசுக்கு அளிக்கிறோம் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“ஈஷா வித்யா பள்ளி வளாகங்களை, 990 படுக்கை வசதியுடன் கூடிய #கோவிட் மையங்களாக பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசுக்கு கொடுக்கிறோம். இந்த சவாலிலிருந்து வெளிவர நம் சமூகம் ஒன்றிணைந்து நிர்வாகத்தின் கரங்களை பலப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதன்படி, கோவை, ஈரோடு, சேலம், நாகர்கோவில், தூத்துக்குடி, விழுப்புரம், கடலூர், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள ஈஷா வித்யா பள்ளிகளை கொரோனா சிகிச்சை மையங்களாக பயன்படுத்தி கொள்ள முடியும்.

8 ஈஷா வித்யா பள்ளிகளை கொரோனா சிகிச்சைக்காக அரசுக்கு அளிக்கிறோம் - சத்குரு | Corona Eesha School Treatment Sathguru