கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு மீண்டும் கொரோனா
கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு இரண்டாவது முறையாக கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களும் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா சுகாதார அதிகாரிகளோடு கொரோனா கட்டுப்படுத்துவது குறித்து தந்து வீட்டில் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது குறித்து எடியூரப்பா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, தனக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தான் நலமாக இருந்தாலும் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி கொரோனாவுக்கான சிகிச்சைகளையும் மேலும் தனிமைப்படுத்துதலையும் மேற்கொண்டுளேன்.
அதுமட்டுமின்றி தன்னுடன் கடந்த சில நாட்கள் தொடர்பில் இருந்தவர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஏற்கனவே கடந்த வருடம் ஒருமுறை எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.