பெண்களின் கம்மலையும் விட்டுவைக்காத கொரோனா - மதுரையில் நடந்த சம்பவம்
மதுரையில் கொரோனா வைரஸ் வடிவில் தங்கத்தோடு விற்பனைக்கு வந்துள்ளது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் பீதி இன்னும் மக்களிடையே நிலைகொண்டுள்ளது. ஆனால் வழக்கம்போல நம் பொதுமக்கள் கொரோனாவின் பெயரில் விதவிதமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி அசத்தி வருகின்றனர்.
அதன்படி கொரோனா வைரஸ் வடிவிலான போண்டா, தோசை, முகக்கவசம், புரோட்டா என பல்வேறு பொருட்களை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மதுரையில் கொரோனா வடிவில் தங்கத்தோடு விற்பனைக்கு வந்துள்ளது.
மதுரை நேதாஜி சாலையில் அமைந்துள்ள தனியார் நகைக்கடை ஒன்றில் கொரோனா வைரஸ் போன்று வடிவமைக்கப்பட்ட காதணிகள் விற்பனை செய்யப்பட்டு வருவது பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சம்பவம் மதுரை முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.