கொரோனா தானாக குறையவில்லை – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
தடுப்பூசி செலுத்திவதில் பொதுமக்கள் அலட்சியம் வேண்டாம் என்று க்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்பை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் துவங்கி வைத்தபின், தமிழகத்தில் மருத்துவப்படிப்பில் 6,558 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
நேற்று முதல் மருத்துவ கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 1.13 கோடி பேர் 2ம் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. அவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்திவதில் பொதுமக்கள் அலட்சியம் வேண்டாம் என்றும் தெரிவித்தார்.
கொரோனா தொற்று தானாக ஏறி தானாக குறையவில்லை. அரசின் நடவடிக்கை மற்றும் மக்களின் ஒத்துழைப்பால்தான் குறைந்தது எனவும் கூறினார். கொரோனா தொற்று படிப்படியாக குறைந்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் மருத்துவமனைகளில் 2,690 கொரோனா நோயாளிகள் தான் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேவை இல்லாத பட்சத்தில் கோவிட் கேர் சென்டர்கள் படிப்படியாக குறைக்கப்படும். கோவிட் கேர் சென்டர்களில் பணிபுரிபவர்கள் பழைய பணிக்கு திரும்புவார்கள் என்றும் குறிப்பிட்டார்.