கழிவுநீர் மாதிரிகளில் கொரோனா வைரஸ் .. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

COVID-19 Delhi
By Irumporai Dec 25, 2022 12:18 AM GMT
Report

டெல்லி மற்றும் மும்பையில் உள்ள கழிவுநீர் மாதிரிகளில் கொரோனா வைரஸின் ஆர்என்ஏ கண்டறியப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா அதிகரிப்பு 

சீனாவில் கொரோனா வைரசின் பாதிப்பு அதிகரித்துள்ளதால் , உலகஅளவில் தற்போது கொரோனாவின் தாக்கம் ஒரு சில நாடுகளில் சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளதால், மீண்டும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்தியாவும் மேற்கொண்டு வருகிறது.

கழிவுநீர் மாதிரிகளில் கொரோனா வைரஸ் .. மத்திய அரசு அதிர்ச்சி தகவல் | Corona Detected In Sewage Samples From Delh

இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், உலகளவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கணக்கில் கொண்டு நாட்டின் சுற்றுச்சூழல், கழிவுநீர் மற்றும் தொற்று கண்காணிப்பை அரசாங்கம் தீவிரமாக கண்காணித்து வருவதாக கூறினார். 

கழிவு நீரில் கொரோனா 

மேலும் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள கழிவுநீர் மாதிரிகளில் கொரோனா வைரஸின் ஆர்என்ஏ கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் .( கொரோனா RNA என்பது DNAவின் எதிர் மாதிரி ஆகும். ) ஆகவே முகமூடிகளை அணிய வேண்டும் எனவும், நெரிசலான இடங்களைத் தவிர்க்க வேண்டும் எனவும், கோவிட் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றவும் மக்களை கேட்டுக்கொள்கிறேன் என அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.