நாடு முழுவதும் ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும்!

corona-death-india-vaccince
By Jon Jan 10, 2021 02:58 PM GMT
Report

ஜனவரி 16ம் தேதி முதல் இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு நாடும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளன, எனினும் ஒரு சில நாடுகளில் இதன் இரண்டாவது அலை பாரிய அழிவை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்தியாவில் நாடு முழுவதும் ஜன.16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மொத்தம் 3 கோடி பேருக்கு முதலில் தடுப்பூசி போடப்படும்.

முன்கள பணியாளர்களை தொடர்ந்து 27 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

50 வயதுக்கு மேற்பட்டோர், 50 வயதுக்கு உட்பட்ட இணை நோய் உள்ள சுமார் 27 கோடி பேருக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.