கொரோனா தடுப்பூசி போட மாட்டேன் - அகிலேஷ் யாதவ் அறிக்கை
பாஜக அரசின் கொரோனா தடுப்பூசியை நம்பவுவது கடினம்எனவும், ஆகையால் இப்போதைக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளமாட்டேன் எனவும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி இன்னும் சில நாட்களில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனாலும் கொரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். குறிப்பாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியம் சுவாமி, இந்தியர்கள் என்ன பரிசோதனை எலிகளா?’ என கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், சமாஜ்வாதி கட்சி தலைவரும், உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்மந்திரியுமான அகிலேஷ் யாதவ் தான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளமாட்டேன் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அகிலேஷ் நான் இப்போதைக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளமாட்டேன் என கூறியுள்ளார் . மேலும் பாஜக அரசின் தடுப்பூசியை தான் எப்படி நம்புவது என கேள்வி எழுப்பிய அவர்,சமாஜ்வாதி ஆட்சி எப்போது அமையுமோ அப்போது அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும்.
என அவர் தெரிவித்துள்ளார்.