இன்னும் 15 நாளில் கொரோனா 2 தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரும்- எய்ம்ஸ்உறுதி
இந்தியாவில் 15 நாட்களில் கொரோனா தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் ரன்தீப் குலேரியா கூறினார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம், அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்த கோவிஷீல்டு என்ற தடுப்பூசியை புனேவை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் உற்பத்தி செய்து வருகிறது.
இந்த கோவிஷீல்டு தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசரகால தடுப்பு மருந்தாக பயன்படுத்தப்படஉள்ளது.
இதேபோல் உள்நாட்டு தயாரிப்பான, பாரத் பயோடெக் நிறுவனத்தின், கோவாக்சின் என்ற தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு தடுப்பூசிகளும் வரும் 15 நாட்களில் பயன்பாட்டுக்கு வரும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
மேலும், தடுப்பூசிகள் குளிர்ந்த நிலையில் சேமிப்பு மிகவும் முக்கியமானது என்றும் ரன்தீப் குலேரியா கூறினார்.