கொரோனாவால் பிரபல சின்னத்திரை இயக்குனர் மரணம்

CINEMA INDIA DIRECTOR
By Jon Dec 28, 2020 01:26 PM GMT
Report

பிரபல வங்காள மொழி சீரியல் இயக்குனர் தேபிதாஸ் பட்டாச்சார்யா கொரோனா பாதித்து உயிரிழந்துள்ளார்.

இவர் சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார். இவர் பல ஹிட் தொடர்களை இயக்கியிருக்கிறார். இவர் பல நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தியுள்ளார்.

தற்போது பிரித்தாஷ்ரம் என்ற சின்னத்திரை நிகழ்ச்சியின் அடுத்த சீசனை இவர் இயக்கி வந்தார்.

இப்போது இவரது மறைவை அடுத்து நடிகர், நடிகைகள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.