லாக்டவுன் போட்டவுடனேவா : முதல் முறையாக , வடகொரியாவில் கொரோனா மரணம்

COVID-19 North Korea Kim Jong Un
By Irumporai May 13, 2022 02:35 AM GMT
Report

கடந்த 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் கொரோனா தீவிரமாக பரவிய நிலையில்,வடகொரியாவில் யாருக்கும் கொரோனா இல்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது.குறிப்பாக,வட கொரியாவில் உள்ள 25 மில்லியன் மக்களில் யாருக்கும் தடுப்பூசி போடவில்லை என்று கூறப்படுகிறது.

உண்மையில்,வடகொரியா அரசு சீனா, ரஷ்யா மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியவற்றின் தடுப்பூசி சலுகைகளை நிராகரித்தது. இதனிடையே,ஜனவரி 3,2020 முதல் இந்த ஆண்டு மே 11 வரை,வட கொரியாவில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றும், பூஜ்ஜியமாக இறப்புகள் பதிவாகியுள்ளன என்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்திருந்தது.

இந்த சூழலில்,இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு,வட கொரியாவில் முதல் கொரோனா வழக்கு பதிவாகியுள்ளது.இதனால்,வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்,கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக நாட்டின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி,கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ‘முழு ஊரடங்கு’ உடனே அமல்படுத்த நேற்று உத்தரவிட்டார்.

இந்நிலையில்,வடகொரியாவில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.நாடு முழுவதும் காய்ச்சல் தீவிரமாக பரவி வரும் நிலையில் ஆறு பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் உயிரிழந்தவர்களில் ஒருவருக்கு ஒமைக்ரான தொற்று இருந்ததாக கூறப்படுகிறது. அதே சமயம் அந்த தொற்று எவ்வாறு பரவியது என்பது குறித்து இன்னும் கண்டுபிடிக்கமுடியவில்லை 

வடகொரியாவில் உள்ள பொது மக்கள் இது வரை கொரோனா தடுப்பூசி போடப்படாததால் பலர் ஊட்டச் சத்து குறைபாடுள்ளவர்களாக இருப்பதாலும் ஏற்படும் காய்ச்சல் தொற்று பரவல் பெரும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.