தமிழகத்தில் மீண்டும் 2000த்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில், ஒரு நாள் கொரோனா பாதிப்பு, மீண்டும் 2 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பதிதாக ஆயிரத்து 971 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற ஆயிரத்து 131 பேர் குணமடைந்து, வீடு திரும்பி உள்ளனர். சிகிச்சை பலனின்றி கடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் உயிரிழந்தனர். சென்னை பெருநகரில், மேலும் 739 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் 205 பேருக்கும், கோயம்புத்தூரில் 173 பேருக்கும், தஞ்சாவூரில் 111 பேருக்கும், திருவள்ளூரில 107 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதுதவிர, காஞ்சிபுரம், திருவாரூர், திருப்பூர், திருச்சி மற்றும் வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.