கொரோனா குறித்து தவறான தகவல்கள் பரப்பியதில் இந்தியா முதலிடம்

India Corona Covid 19 Fake Information First Place
By Thahir Sep 15, 2021 04:40 AM GMT
Report

கொரோனா குறித்து தவறான தகவல்களை பரப்பியதில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமடைய தொடங்கிய பொது அந்த நோயை பற்றிய புரிதல் இல்லாமல் தவறான தகவல்கள் பரப்பப்பட்டன.

கொரோனா குறித்து தவறான தகவல்கள் பரப்பியதில் இந்தியா முதலிடம் | Corona Covid19 India First Place Fake Information

எழுமிச்சை சாறு குடித்தால் கொரோனா வராது, ஏலக்காய், கற்பூரம் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும், கதிர்வீச்சு மூலம் கொரோனா பரவுகிறது, என போதிய மருத்துவ ஆதாரமின்றி தவாறான தகவல்கள் பரப்பப்பட்டன.

இந்த போலியான தகவல் குறித்து கனடாவில் உள்ள அல்பட்ரா பல்கலைக்கழகத்தை சேர்ந்த முகமத் சகீர் அல் ஜமான் சர்வதேச நூலக சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் கூட்டமைப்புடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார்.

கொரோனா குறித்து மொத்தம் 138 நாடுகளில் இருந்து பரப்பப்பட்ட 9,6557 தகவல்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

இதில் 85 சதவிகிதத்துடன் சமூக வலைத்தளங்கள் முதலிடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. இணைய ஆதாரங்களை மட்டுமே அடிப்படையாக வைத்தது 91 சதவிகித கொரோனா போலி செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன .

இதில் 18 சதவிகிதத்துடன் இந்தியா முதலிடத்திலும், பிரேசில் 9 சதவிகிதத்துடன் 2-ம் இடத்திலும் உள்ளது. தகவல்களை பரப்புவது பற்றிய விழிப்புணர்வு டிஜிட்டல் தகவல் பரிமாற்றம் பற்றிய அறியாமை போலி தகவல் பற்றிய புரிதல் இல்லாமையே தவறான தகவல்கள் பரவ காரணம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.