இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்காவை தொடர்ந்து நைஜீரியாவிலும் உருமாறும் கொரோனா

#corona #world #covid19
By Jon Dec 25, 2020 10:14 PM GMT
Report

நைஜீரியாவில் மேலும் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதாக அந்நாட்டின் நோய் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் ஏற்பட்ட வைரஸ் போல் இல்லாமல் மற்றோரு புதிய வகை கொரோனா வைரஸ் நைஜீரியாவில் கண்டறியப்பட்டதாக அந்நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து நோய்தொற்று தடுப்பு மையம் கூறும்போது, நைஜீரியாவில் உருமாற்றம் அடைந்து கொரோனா வைரஸ் பரவி வருவதாகவும், ஆனால் இந்த வைரஸ் பற்றி விரிவாக ஆராய வேண்டி உள்ளதாக தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து, டென்மார்க், பெல்ஜியம், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் தனது மரபணுவை மாற்றிக் கொண்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஆப்பிரிக்காவில் அதிக மக்கள் தொகை உள்ள நைஜீரியாவில் உருமாற்றம் அடைந்த மற்றொரு கொரோனா வைரஸ் பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.