தமிழகத்தில் 45 வயதுக்கு அதிகமான அலுவலர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

vaccine corona edapadipalanisamy 45yearsold
By Praveen Apr 14, 2021 10:58 AM GMT
Report

 தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமெடுத்ததை தொடர்ந்து தற்போது தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் பொதுப்பணித்துறை கட்டிட பிரிவு அலுவலர்களில் 45 வயதுக்கு அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அந்த உத்தரவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

"தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மத்திய அரசின் வழிகாட்டுதல் படி 45 வயதுக்கு மேற்பட்டோர் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஏப்ரல் 14 முதல் 16 வரை ‘தடுப்பூசி திருவிழா’ என்ற அடிப்படையில் குறிப்பிட்ட வயதுக்குள் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. மேலும், முன்களப் பணியாளர்கள், அரசு அலுவலர்களில் 45 வயதுக்கு மேற்பட்டோர் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் "

இவ்வாறு முதல்வர் பழனிசாமியும் அறிவுறுத்தியிருந்தார்.