கொரோனாவை ஒழிக்க யாகங்கள் நடத்தும் அரசு மருத்துவமனைகள்

corona covid 19 gujarat indiacovid secondwave
By Praveen Apr 14, 2021 10:04 AM GMT
Report

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது அதிவேகமெடுத்துள்ளதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனாவால் உலகமே ஸ்தம்பித்தது, உலகப் பொருளாதாரம் தள்ளாடும் நிலையில், பல்வேறு நாடுகளில் இரண்டாம், மூன்றாம் கட்ட அலை வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியா உட்பட பல நாடுகள் தடுப்பூசிகளை தயாரித்து தற்போது தங்கள் நாட்டு மக்களுக்கு செலுத்தி வருகிறது.

ஆனாலும் தற்போது வரையில் கொரோனாவின் இரண்டாவது அலையால் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ஒரு லட்சம் கொரோனா நோயாளிகள் பதிவாகி வருகின்றனர்.

இந்நிலையில் குஜராத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், அரசு மருத்துவமனைகள் கொரோனாவை அழிக்க யாகங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளன.

சூரத் நகரில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் ஆர்ய சமாஜ் அமைப்பு சார்பில் யாகம் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.