இரவு 11 மணி... திடீரென விசிட் அடித்த முதல்வர்: அதிரடி காட்டும் ஸ்டாலின்
சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் செயல்பட்டு வரும் கொரோனா கட்டளை மையத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். கொரோனா சிகிச்சை பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்காக அனைத்து மாவட்டங்களையும் ஒருங்கிணைக்க கட்டளை மையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
[GDA9B8 ]
அதன்படி, சென்னை உட்பட 38 மாவட்டங்களுக்கான கட்டளை மையம் சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டளை மையங்கள் மூலம், மருத்துவமனையில் உள்ள படுக்கை, மருந்து, ஆக்சிஜன் இருப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனத்தை ஒருங்கிணைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா கட்டளை மையத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 104 கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் பெறப்படும் அழைப்புகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.
[RNB6OQ ]
இந்த ஆய்வின் போது சென்னை வானகரம் பகுதியில் இருந்து தொடர்பு கொண்ட பங்கஜம் என்பவரது அழைப்பை எடுத்த முதல்வர்.
அவரது தேவையை பதிவு செய்ததுடன், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கான படுக்கை வசதி வழங்க உத்தரவிட்டார்.