கொரோனாவை விட மிக கொடூர வைரஸ்... - சீனாவுடன் சேர்ந்து பாகிஸ்தான் உருவாக்க திட்டம்? - அதிர்ச்சியில் உலக மக்கள்

COVID-19 Pakistan China
By Nandhini Nov 10, 2022 07:04 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

கொரோனாவை விட மிக கொடூர வைரஸை உருவாக்க, பாகிஸ்தானும் சீனாவும் திட்டமிட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உலக மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது.

சீனாவுடன் சேர்ந்து பாகிஸ்தான் உருவாக்க திட்டம்?

கொரோனா, மற்றும் அதன் உருமாறிய வைரஸ்கள் இன்னும் உலகை ஆட்டிப்படைத்து வரும் வேளையில், பாகிஸ்தானும், சீனாவும் ராவல்பிண்டிக்கு அருகில் ரகசியமாக DSTO என்ற பெயரில் புதிய நோய்க் கிருமியை உருவாக்கி வருவதாக தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தால் நடத்தப்படும், பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பு (DSDO) என்ற பெயரில் பாகிஸ்தானில் மிக கொடிய நோய்க்கிருமிகளை ஆராய்ச்சி செய்ய அறிவியல் உள்கட்டமைப்பை அமைத்துள்ளது.

இந்த இருப்பிடம் மிகவும் ரகசியமாக இருப்பதாக ஜியோ-பொலிடிக் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

கொரோனவை விட மிக கொடூர வைரஸ்

கொரோனாவை விட பல கொடிய வைரஸ் கிருமிகளை இந்த ஆய்வகங்களில் சீனா உருவாக்க திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால், சீனா ஆய்வகத்திலிருந்துதான் கொரோனா இந்த உலகத்திற்கு பரவியிருக்கக் கூடும் UK இன்டெல் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இத்தகைய மிக கொடிய நோய்க்கிருமியை ஆயுதமாக பயன்படுத்த இரு நாடுகளும் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இத்தகவல் சர்வதேச நாடுகளை நடுநடுங்க வைத்துள்ளது.

பாகிஸ்தான் மறுப்பு

ஆனால், 2020ம் ஆண்டில் பாகிஸ்தான் இதுபோன்ற செய்திகளை முதலில் மறுத்தது. தற்போது பரவி வரும் இத்தகவலையும் பாகிஸ்தான் அரசு உண்மை கிடையாது என்று மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், ராவல்பிண்டியில் இது போன்ற ஆராய்ச்சி மையம் ஏதும் இல்லை என்று பாகிஸ்தான் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

கொரோனவை விட மிக கொடூர வைரஸை, சீனாவுடன் சேர்ந்து பாகிஸ்தான் உருவாக்க திட்டமிட்டுள்ள தகவல் உலக மக்களை மேலும் பீதி அடைய வைத்துள்ளது.   

corona-china-pakistan-dsto