சீனாவில் ஒரே ஒருவருக்கு கொரோனா பாதிப்புக்காக 3.2 லட்சம் பேர் தனிமைபடுத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம்
கொரோனா
உலக நாடுகளில் கொரோனா பாதிப்புகள் பெரும் அச்சுறுத்தலாக நீடித்து வரும் நிலையில் கடந்த 2021ம் ஆண்டு வந்த டெல்டா வகையால் இந்தியாவில் 2வது அலை உருவாகி பலத்த பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதன் பின்னர் டெல்டா பிளஸ் வகை வந்தபோதிலும் பெருமளவில் பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை.
இந்த சூழலில் ஒமைக்ரான் என்ற புதிய உருமாறிய வகையானது தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு பின்பு உலக நாடுகளில் பரவ தொடங்கியது. முழு அளவில் தடுப்பூசி செலுத்தியவர்களையும் இந்த ஒமைக்ரான் விட்டு வைக்கவில்லை என்பதால் பொதுமக்களிடையே பீதியை உண்டாக்கியது.
கொரோனா பெருந்தொற்று இத்துடன் முடிந்து விடாது. உலக அளவில் ஒமைக்ரானின் அதிக பரவலானது புதிய உருமாறிய வகை உருவாக வழிவகுக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்தியா முழுவதும் தற்போது கொரோனா பரவல் குறைந்து வந்ததால், கட்டுப்பாடுகளை மத்திய அரசும், மாநில அரசும் தளர்வுகளை அறிவித்தது. மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், திரும்பவும் இந்தியாவில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருகிறது.
3.2 லட்சம் பேரை தனிமைப்படுத்திய சீன அரசு
இந்நிலையில் சீனாவின் வுகேங்க் என்ற நகரில் ஒரு நபருக்கு தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறார். இதனால் சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் வசிக்கும் அந்நகரத்திற்கு ஒட்டுமொத்தமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நோய் பரவல் தடுப்பு நோக்கில் அந்நகரத்தை சேர்ந்த யாரும் வரும் வியாழக்கிழமை மதியம் வரை வீட்டை விட்டு வெளியே வர அனுமதி இல்லை என்று அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
அந்நாட்டின் மிகப் பெரிய உருக்கு ஆலை இந்த வுகேங்க் நகரில் தான் உள்ளது என்பதால் உருக்கு ஏற்றுமதி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வரலாற்றில் முதன்முறையாக 10 மாத குழந்தைக்கு இந்திய ரயில்வேயில் பணி