தமிழகத்தில் அசுர உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு..ஒரே நாளில் 27 ஆயிரத்தை தாண்டியது
தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்தை தாண்டியது. சென்னை தவிர பிற மாவட்டங்களிலும் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா நோய்ப்பரவல் மிக வேகமாக உள்ளது. ஒரே நாளில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 13 பேர் உட்பட 27 ஆயிரத்து 397 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1,551998 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், இந்தப் பாதிப்பு உறுதியாகியுள்ளது.
தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 6 ஆயிரத்து 846 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 23 ஆயிரத்து 110 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 11 லட்சத்து 96 ஆயிரத்து 549 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 241 பேர் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 412 ஆக அதிகரித்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் 151 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 90 பேரும் உயிரிழந்தனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய் இல்லாத 61 பேர் பலியாகினர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 58 பேர் உயிரிழந்தனர். மாநிலம் முழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 401 ஆக உயர்ந்துள்ளது.