தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று - பாதிப்பு இத்தனை பேருக்கா?
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 99 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகரிக்க தொடங்கிய கொரோனா தொற்று
இந்தியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் புதிதாக 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 608 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் புதிதாக நேற்று 397 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு
நேற்று முன்தினம் இந்தியாவில் ஒரே நாளில் 1890 பேருக்கு தொற்று பரவியுள்ளது. இது கடந்த 210 நாட்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
மாநில அரசுகள் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.