இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு

India Corona Second Wave
By mohanelango May 25, 2021 05:36 AM GMT
Report

இந்தியாவில் கொரோனாவில் இரண்டாம் அலை கடந்த ஒரு மாதமாக கோரத்தாண்டவம் ஆடிய நிலையில் தினசரி கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றன.

40 நாட்களுக்குப் பிறகு இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்திற்கும் குறைவாக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,96,427 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 3,511 இறப்புகள் பதிவாகியுள்ளன. 22 நாட்கள் கழித்து இந்தியாவில் தினசரி இறப்புகள் குறைவாக பதிவாகியுள்ளது.

இந்தியாவில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 2 கோடியே 70 லட்சத்தை நெருங்கியுள்ளது. கொரோனா மரணங்கள் 3 லட்சத்தைக் கடந்துள்ளது.