தமிழகத்தில் குறைந்தது கொரோனா தொற்று - பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு..!

Corona Covid19 Case Tamilnadu Decrese
By Thahir Mar 31, 2022 04:27 PM GMT
Report

தமிழகத்தை மட்டுமின்றி உலகையே மிரட்டி வந்த கொரோனா தொற்று தமிழகத்தில் குறைய தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பு 39 ஆக இருந்த நிலையில் இன்று கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 35 ஆக குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் இது வரை கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 34 லட்சத்து 52 ஆயிரத்து 825 ஆக உள்ளது. இன்று மட்டும் கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்து சென்றோர் எண்ணிக்கை 51 பேர் குணமடைந்துள்ளனர்.306 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தாக்குதலுக்கு இன்று உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்து 25 ஆக உள்ளது.