மருத்துவமனையில் இடமில்லை..பரிதாபமாக உயிரிழந்த ஒன்றரை வயதுக் குழந்தை
corona
baby
death
treatment
oxygen
By Praveen
4 years ago
விசாகப்பட்டினத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான ஒன்றரை வயது சிறுமிக்கு அரசு மருத்துவமனையில் இடம் இல்லாத நிலையில் ஆம்புலன்சில் மரணம்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் சமீபத்திலுள்ள அச்சுதாபுரம் கிராமத்தை சேர்ந்த ஒன்றரை வயது சிறுமி ஜான்விதா. கொரோனா தொற்றுக்கு ஆளான சிறுமி ஜான்விதாவை பெற்றோர் விசாகப்பட்டினத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
அங்கு உள்ள கொரோனா வார்டில் படுக்கை காலியாக இல்லை. எனவே சுமார் 2 மணி நேரம் ஆம்புலன்சில் காக்க வைக்கப்பட்ட சிறுமிக்கு அங்கேயே ஆக்சிஜன் கொடுக்கப்பட்டது. ஆனாலும் அந்த சிறுமி ஜான்விதா பரிதாபமாக மரணமடைந்தார்.
தங்களுடைய மகள் பரிதாபமாக மரணம் அடைந்ததை பார்த்து கொண்டிருந்த பெற்றோர் அலறி அழுத காட்சி பார்த்து கொண்டிருந்தவர்களை கண்கலங்க செய்தது.