ஓவியங்கள் மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய தன்னார்வலர்கள்
முககவசங்களின் அவசியம், முன்களப்பணியாளர்களுக்கு மரியாதை, பொதுமக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வு ஒவியங்கள் :காலை முதல் மாலை வரைந்த ஒவியர்கள்
கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா நோயிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாக்க கட்டாயம் முகக் கவங்கள் அணிய வேண்டும், சமூக இடைவெளிகளை பின்பற்ற வேண்டும், கிருமிநாசினி மருந்துகளை பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வுகள் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அரசும் தன்னார்வலர்களும் நோயை கட்டுப்படுத்த பொதுமக்கள் மத்தியில் தினமும் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஒசூரில் தமிழ்நாடு ஒவியர்கள் சங்கம் சார்பில் கொரோனா நோய் தடுப்பது குறித்த விழிப்புணர்வு ஒவியங்கள் வரையப்பட்டன.
ஒசூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதி சாலையில் 30க்கும் மேற்பட்ட ஒவியர்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த ஒவியங்கள் வரையும் பணிகளில் ஈடுபட்டனர்.
இதில் முக கவங்களின் அவசியம் குறித்தும், முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள் மற்றும் காவல்துறையினருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், அனைவரும் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வலியுறுத்தும் விதமாகவும் இந்த ஒவியங்கள் வரையப்பட்டன.
பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியங்கள் வரைந்த ஒவியர்களை ஒசூர் காவல்துறையினர், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர். ஒவியம் வரையப்பட்ட இடம் ஒசூர் நகரின் மைப்பகுதியில் உள்ளதால் அந்த வழியாக சென்ற வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் அதனை பார்த்து விழிப்புணர்வு அடைந்து வருகின்றனர்.