சீர்காழியில் ஓவியர் சங்கம் சார்பில் வரையப்பட்ட பிரமாண்ட கொரோனா விழிப்புணர்வு ஓவியம்...
சீர்காழியில் ஓவியர் சங்கம் சார்பில் பிரமாண்ட கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி சார்பாக கொரோனா தொற்று குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி சீர்காழி பேருந்து நிலையம் மற்றும் காவல் நிலைய சந்திப்பில் சாலையின் நடுவே பிரமாண்ட கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியம் ஓவியர் சங்கம் சார்பாக வரையப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் மாநில ஒருங்சிணைப்பு செயலாளர் ஞானவேல் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டு பிரமாண்ட ஓவியத்தை வரைந்தனர். மேலும் நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி, காவல்துணை கண்காணிப்பார் யுவபிரியா மற்றும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு ஓவியர் சங்கத்தினரை பாராட்டினர்.