நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதியானது

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

2003-ல் கங்கோத்ரி என்கிற தெலுங்குப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் அல்லு அர்ஜுன். நடிகர் சிரஞ்சீவியின் உறவினர். ஏராளமான தெலுங்குப் படங்களில் நடித்து முன்னணி நடிகராக உள்ளார். இந்நிலையில் இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதுபற்றி அவர் கூறியதாவது,

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதித்துக் கொள்ளுங்கள். பாதுகாப்புடன் இருங்கள். தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள். என்னுடைய ரசிகர்கள் என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நான் நலமாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்