தமிழகத்தில் இன்றும் 30ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

corona tamilnadu
By Irumporai May 18, 2021 04:07 PM GMT
Report

இன்று தமிழகத்தில் 33,059 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று  உறுதியாகியுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 16,64,350 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 33,059 பேர்களில் 6,016 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 மேலும் தமிழகத்தில் இன்று 21,362 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 14,03,052 ஆக உயர்ந்துள்ளது.