திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா .. மருத்துவமனையில் அனுமதி

Corona coronavirus TRBaalu
By Irumporai Apr 14, 2021 09:15 AM GMT
Report

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது இந்த நிலையில் பல முக்கிய அரசியல் தலைவர்கள் கொரோனா தொற்றால்பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திமுக பொருளாளரும், ஸ்ரீபெரும்புதூர் மக்களவை உறுப்பினருமான டி.ஆர்.பாலுவுக்கு இன்று தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் டி.ஆர்.பாலு.இதுகுறித்து அவரது மகன் டி.ஆர்.பி.ராஜா தனது ட்வீட்டர் பதிவில் :

 ‘ ‘எனது தந்தை டி.ஆர்.பாலு அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளது.

கடந்த ஒரு வாரமாக அவரை சந்தித்தவர்கள் தயவுகூர்ந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்’’ என தெரிவித்துள்ளார்

கடந்த வாரம் திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு தற்போது குணமாகி வீடு திரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.