எனக்கு கொரோனாவா? சும்மா கண்டதையும் எழுதாதீங்க- நடிகை ராதிகா ஆவேசம்

covid vaccine actress virus radhika
By Jon Apr 09, 2021 10:28 AM GMT
Report

 இந்தியா முழுவதும் கொரோனாவின் 2ம் அலை அசுர வேகத்தில் பரவி வருகிறது. இந்நிலையில், கொரோனா பிடியில் அரசியல்வாதிகளும், சினிமா நட்சத்திரங்களும் சிக்கி தவித்துக் கொண்டு வருகின்றனர். இதனையடுத்து, நடிகை ராதிகா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், எனக்கு கொரோனா பாதிப்பு கிடையாது என்று நடிகை ராதிகா சரத்குமார் விளக்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், என் மீது அக்கறைக் காட்டிய எல்லாருக்கும் நன்றி. எனக்கு கொரோனா பாதிப்பு இல்லை. இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதன் பிறகு உடல் வலி ஏற்பட்டது.

அவ்வளவு தான்.என்னுடைய உடல்நலத்தையும் வழக்கையும் தொடர்புப்படுத்தி நிறைய தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. நீதிமன்றத்தை நாடுவோம் என பதிவிட்டுள்ளார்.  

செக் மோசடி வழக்கில் ராதிகாவுக்கும். சரத்குமாருக்கும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது. அவர்கள் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அவகாசம் கோரியதால், தண்டனை நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.