தடுப்பூசி போட தவறாதீர்கள்: நடிகர் கார்த்தி வேண்டுகோள்
இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகர்கார்த்திக், 'தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்; தாமதப்படுத்த வேண்டாம்' என, தெரிவித்தார்.
நடிகர் கார்த்திக், தேர்தல் பிரசாரம் முடிந்து திரும்புகையில், மூச்சுத்திணறலால் பாதிக்கப் பட்டார். அடையாறு போர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், உடல்நலம் தேறி, 'அந்தகன்' படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். சமீபத்தில், இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
பின், கார்த்திக் கூறியதாவது:தகுதியுள்ள அனைவரும்தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்; தாமதப்படுத்தவோ,தவறவிடவோ கூடாது. உயிர் பாதுகாப்பில், சமரசம் செய்து கொள்ள வேண்டாம். தடுப்பூசி குறித்த வதந்திகளுக்கு செவி சாய்க்க வேண்டாம்.
சமீபத்தில், ஓட்டு போட்டதன் வாயிலாக, நாம் ஒரு பொறுப்புள்ள குடிமகனாக பெருமிதம் கொண்டோம்.
தற்போது, தடுப்பூசி போடுவதன் வாயிலாக, நமக்கும், நம் சுற்றத்தாருக்கும் பாதுகாப்பை உறுதி செய்து, மேலும், பொறுப்புள்ள குடிமகனாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.