கொரோனா பாதிப்பில் மீண்டும் முதலிடம் பிடித்த சென்னை... பொதுமக்களுக்கு எச்சரிக்கை...
தமிழகத்தில் ஒரேநாளில் 1,964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,81,084 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கொரோனா பாதிப்பால் இன்று 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,395 ஆக உள்ளது.
மேலும் 1,917 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,26,317 ஆக உயர்ந்துள்ளது.
அதிகப்பட்சமாக சென்னையில் 243 பேருக்கும்,கோவையில் 229 பேருக்கும், ஈரோட்டில் 167 பேருக்கும்,திருவள்ளூரில் 98பேருக்கும், சேலத்தில் 85 பேருக்கும், தஞ்சாவூரில் 77 பேருக்கும், திருச்சியில் 78 பேருக்கும், திருப்பூரில் 73 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.