20 ஆயிரமாக குறைந்த கொரானா பாதிப்பு: இன்றைய பாதிப்பு நிலவரம்
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்துக்கும் கீழாக பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த ஒரு வாரங்களாக அமல்படுத்தப்பட்ட தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,37,233 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 33,161 பேர் கொரோனா சிகிச்சையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் இதுவரை தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19,65,939 ஆக உள்ளது.
கொரோனா தொற்றினால் ஒரே நாளில் 434 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு ஆக 27,005 அதிகரித்துள்ளது. கோயம்புத்தூரில் அதிகபட்சமாக 2645 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில்1644 பேருக்கும் உறுதியாகி உள்ளது.