தமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா... இன்றைய பாதிப்பு நிலவரம்...
தமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா வாலிபால் பொது மக்களிடையே நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் 2வது அலை பாதிப்பு கடந்த வாரம் வரை மிகத்தீவிரமாக பரவி வந்தது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு ஒரு வாரம் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்தியது.
இந்நிலையில் இன்று 33,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தவர்களில் 474 பேர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தனர். அரசு மருத்துவமனையில் 275 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 199 பேரும் உயிரிழந்த நிலையில்,இவர்களில் இணை நோய் இல்லாதவர்கள் 125 பேர் உயிரிழந்துள்ளனர். அதே சமயம் 30,063 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் பொதுமக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.