தமிழகத்தில் 18 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு - அச்சத்தில் பொதுமக்கள்
தமிழகத்தில் இன்று 17 ஆயிரத்து 934 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் 17,898 வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்த 36 பேர் என 17,934 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்னிக்கை 88,959 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 75,083 இருந்து 89,959 ஆக அதிகரித்துள்ளது.மேலும் 4,039 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 27,21,725 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் இன்று 19 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,905 ஆக உயர்ந்துள்ளது.இதில் அரசு மருத்துவமனைகளில் 12 பேரும், தனியார் மருத்துவமனையில் 7 பேரும் உயிரிழந்தனர். இன்று மட்டும் சென்னையில் 7,372 பேருக்கும், செங்கல்பட்டில் 1,840 பேருக்கும், கோயம்புத்தூரில் 981 பேருக்கும், திருவள்ளூரில் 931 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.