7 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

Covid 19 Tn government
By Petchi Avudaiappan Jun 22, 2021 04:45 PM GMT
Report

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,895 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 24 லட்சத்து 36 ஆயிரத்து 819 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் தொற்று பாதிப்பு காரணமாக இன்று 194- பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 13,156- பேர் குணம் அடைந்துள்ள நிலையில், சென்னையில் மேலும் 410 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.