கொரோனா மூன்றாவது அலையே முடியல.. அதுக்குல்ல நான்காவது அலையா? பிரான்ஸ் அதிர்ச்சி தகவல்!
கொரோனா வைரசின் மூன்றாவது அலை வேகமாக பரவி வருவது உலகையே அச்சுறுத்தி வருகிறது இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டில் கொரோனா 4 அலை உருவாகியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் இன்னும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையே முடிவுக்கு வராத நிலையில் மூன்றாவது அலை விரைவில் தோன்றும் என்று மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்.
சில நாடுகளில் மூன்றாவது அலை மிக வேகமாக பரவி வருவதாகவும் குறிப்பாக 3வது அலையில் பரவி வரும் டெல்டா வைரஸ் மிகவும் ஆபத்தை விளைவிக்கும் என்றும் மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டில் கொரோன்ன நான்காவது அலை பரவி இருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் மூன்றாவது இடத்தில் இருக்கும் பிரான்ஸ் நாட்டில் மூன்றாவது அலை ஏற்கனவே முடிவுக்கு வந்துவிட்டதாகவும் தற்போது கொரோனா நான்காவது அலை தொடங்கி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
#France enters 4th wave of #COVID19 epidemic https://t.co/rdTOXgwaAs
— CGTN (@CGTNOfficial) July 19, 2021
கொரோனா வைரஸ் மனித இனத்திற்கே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் எத்தனை கொரோனா அலை வரும் என்ற கேள்விதான் அனைவரது மனதிலும் எழுந்துள்ளது